ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர்

செய்தியில் தெரிந்த மேலே சொன்ன தலைப்பை பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.
ஆஹா காங்கிரசுக்கு ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு வார்டிலும் இருக்கிறார்கள் என்று.
பிறகுதான் தெரிந்தது தமிழகம் மொத்தமாகவே சுமார் 1000 பேர்தான் உள்ளனர் என்று .

எது எப்படியோ மாறி மாறி திராவிடக் கட்சிகள் மேல் சவாரி செய்து விட்டு தனியே நிற்கும் போதுதான் தெரிகிறது தலை தப்புமா என்று .

இதே நிலை மற்ற உதிரிக் கட்சிகளுக்கும் பொருந்தும். 

பொறுத்திருந்து பார்ப்போம் உள்(கா) ஆட்சி தேர்தலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக